ரஜினிகாந்த் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாம்... இப்போ வரக்கூடாது... ராதாரவி பொளேர்

Bookmark and Share

ரஜினிகாந்த் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாம்... இப்போ வரக்கூடாது... ராதாரவி பொளேர்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு இப்போது வரக்கூடாது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் 30 ஆண்டுகாலமாக அரசியலுக்கு வரப் போவதாக வதந்திகள் பரவிக் கொண்டே இருக்கின்றன. ரஜினிகாந்தும் இதற்கு தூபம் போடுவது போல அவ்வப்போது செயல்பட்டும் வருகிறார்.

தற்போதும் கூட ரசிகர்களை திடீரென சந்திக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் நிலையில் ரஜினிகாந்த் மூலம் பாஜக தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறதோ என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே நியூஸ் 7 டிவி சேனலுக்கு ராதாராவி நேற்று பேட்டியளித்திருந்தார். அதில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு ராதாரவி அளித்த பதில்:

அய்யய்ய்ய... அவரை சும்மா அரசியலுக்கு வாங்க.. அரசியலுக்கு வாங்கன்னு... இங்க எவ்வளவு தலைவலி இருக்குன்னு அவருக்கு தெரியாதா? தெரியுமே.. .அவரெல்லாம் அரசியலுக்கு வரமாட்டார் என்பது என்னுடைய கணிப்பு

அவரு அரசியலுக்கு வந்திருக்கனும்... அதுக்கு ஒரு டைம் இருந்தது... அது போய்விட்டது... இப்ப அவரு வரக்கூடாது.. ஏன்னா அவரு ஒரு நல்ல மனிதனுங்க... அவரு ஒருவாட்டி என்னை கேட்டார்.. எப்ப கேட்டார்னா குரு சிஷ்யன் டைம்ல...

ஒரு மலையில படப்பிடிப்பு.. கவுதமி அப்பதான் அறிமுகம்.. பல்லாவரம் பக்கத்தில்.. அப்ப என்கிட்ட ரஜினி கேட்டார்.. எப்படி ரவி தேர்தல்ல வந்தா எப்படி இருக்கும்?னு ... நான் அதுக்கு வந்தா உங்களை எல்லாரு திட்டுவானுங்க சார்... என்றேன்.

நீங்க? என்றார்.. நானும் திட்டுவேன் சார் என்றேன். ஒருவேளை ரஜினிகூடவே நான் இருந்துட்டா நான் அவரை திட்டமாட்டேன்... அவரை எதிர்த்து போய் நிற்கும்போது அப்ப மைனஸ் பூராவும் பேசித்தான் ஆகனும்.. அது அரசியல் மேடை.


Post your comment





Related News
பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி
விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
அதுல்யா ரவி நடிக்கும் த்ரில்லர் படம் 'என் பெயர் ஆனந்தன்’!
பலருக்கும் தெரியாத படையப்பா ரகசியம் - நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த உண்மை.!
புதிய தொழில் துவங்கிய அனிருத்
எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க, விஜயால் பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
நாடோடிகள்-2 படம் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்ட படக்குழு.!
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions