ரஜினி படத்தில் நடிப்பதை டுவிட்டரில் உறுதிபடுத்திய ராதிகா ஆப்தே

Bookmark and Share

ரஜினி படத்தில் நடிப்பதை டுவிட்டரில் உறுதிபடுத்திய ராதிகா ஆப்தே

ரஜினியின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆவணி மாதம் தொடங்க இருக்கிறது. ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய வெற்றி படங்களை கொடுத்த பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் இது உருவாகிறது. 

இந்த படத்தில் ரஜினியுடன் பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. இப்போது அவர் ரஜினியுடன் நடிப்பது உறுதியாகி உள்ளது. 

ரஜினி படத்தில் நடிக்கும் தகவலை ராதிகா ஆப்தே தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது. 

சர்ச்சைகள் சிலவற்றில் சிக்கினாலும் சவாலான வேடங்களில் துணிச்சலாக நடிக்கும் ராதிகா ஆப்தே இந்தியில் ‘ஹன்டர்’, ‘பசப்பூர்’ போன்ற படங்களிலும், தமிழில் கார்த்தியின் ‘அழகு ராஜா’, அஜ்மலுடன் ‘வெற்றிச்செல்வன்’, பிரகாஷ் ராஜுடன் ‘டோனி’ ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். 

இதுதவிர மலையாளம், மராத்தி, பெங்காலி என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். ரஜினியுடன் அவர் நடிப்பது உறுதியாகி இருப்பதால், தமிழ் பட உலகில் முக்கிய இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!
அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions