படிக்கவில்லையே என்று கண் கலங்கிய ரஜினிகாந்த்

Bookmark and Share

படிக்கவில்லையே என்று கண் கலங்கிய ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 40 வருடம் கலக்கிவிட்டு தற்போது அரசியலில் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் இவரது ரசிகர்மன்றம் சார்பாக வேலுர் மாவட்டம் சோளிங்கர் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் 2016-2017ம் ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும், நினைவுபரிசும் வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற சோளிங்கர் என்.ரவி அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்...பெரும்பாலான இது போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் நின்று கொண்டும், பரிசு வழங்குபவர்கள் அமர்ந்து கொண்டும் இருப்பார்கள்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களை அமர வைத்து அவர்கள் மத்தியில் நின்று மகிழ்ந்தார். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வயது வித்தியாசமின்றி இருகரம் கூப்பி வணங்கி வரவேற்று மகிழ்ந்தார்.ரவி பேசுகையில், தலைவர் அவர்கள் மாணவர்கள் மீது கொண்டுள்ள பற்றை மிகத்தெளிவாக விளக்கினார்.

அப்பொழுது தலைவர் அவர்கள் படிப்பை பற்றி பேசும் போதெல்லாம் தான் படிக்கவில்லையே என்று ஏங்கியது உண்டு என்று கண்கலங்கினார், அது போல ஒரு நாளும் இனி வரும் தலைமுறையினர் வருந்து விட கூடாது என்று அன்பாக கேட்டுக்கொண்டார்.


Post your comment





Related News
காலா டீஸர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.!
சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இதோ - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.!
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
சினிமாவுல இருக்குறவங்களையே மதிக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார் - லொள்ளுசபா மனோகர் அதிரடி
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!
அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions