ரசிகர்களுடன் ரஜினிகாந்த் 2-வது நாளாக சந்திப்பு

Bookmark and Share

ரசிகர்களுடன் ரஜினிகாந்த் 2-வது நாளாக சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிவு செய்தார். அனைத்து மாவட்ட  ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் மூன்று மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ரசிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

நேற்று கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் புகைப்படம்  எடுத்துக் கொண்டார். ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியபோது, அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிட்டார். இது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இன்று 2-வது நாளாக புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டத்தை சேர்ந்த 750 ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். சரியாக காலை 9 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரஜினி வந்தார். இன்று வெள்ளை ஜிப்பா அணிந்து இருந்தார்.

மேடையில் உள்ள நாற்காலியில் ரஜினி உட்கார்ந்து இருந்தார். அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் வரிசைப்படி ரஜினி அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாளை விழுப்புரம், சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்ட ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்.


Post your comment





Related News
மீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.!
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!
கொண்டாட்டத்திற்கு தயாரான விஜய் ரசிகர்கள் - ஸ்பெஷல் அப்டேட்.!
ரசிகர்களால் வீட்டை விட்டு வெளியேறிய ப்ரியா வாரியர் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
ரசிகர்களிடம் அஜித்திற்கு பிடிக்காத விஷயம் இது தான் - அவரே சொன்ன தகவல் .!
ட்விட்டரில் கெத்து காட்டும் தல ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விஜயின் அதிரடி அறிவிப்பால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - புகைப்படம் இதோ.!
பிரபல இயக்குனருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் - சர்ச்சை புகைப்படம் உள்ளே.!
இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions