பத்ம விபஷண் விருதினால் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்: ரஜினிகாந்த்

Bookmark and Share

பத்ம விபஷண் விருதினால் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்: ரஜினிகாந்த்

“பத்ம விபூஷண் விருதினால் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். 

மத்திய அரசு நேற்று மாலை பத்ம விருதுகளை அறிவித்தது. அதில், நடிகர் ரஜினிகாந்துக்கு ‘பத்ம விபூஷண்’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

“எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பத்ம விபூஷண்’ மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகும். இந்த விருதின் மூலம் நான் பெருமைப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்.

இதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த என் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகிய அத்தனைபேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” 
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். 

ரஜினிகாந்துக்கு ‘பத்ம விபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், அவருக்கு ஏராளமான ரசிகர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

நடிகர் சிவக்குமார், அவருடைய மகன்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் ரஜினிகாந்துடன் போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இதேபோல் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, ஆஸ்கார் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். 

ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் டுவிட்டரில், “தலைவருக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்து இருப்பது பெருமை அளிக்கிறது. இது மிகவும் அற்புதமானதொரு நாள்” என்று குறிப்பிட்டு உள்ளார். 

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ் திரையுலகிற்கு பல்லாண்டு காலமாக கலைச்சேவை ஆற்றிவரும் ரஜினிகாந்துக்கு இந்த விருது கிடைத்தமைக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துகள்.

நதிகள் இணையவேண்டும். நாட்டின் வளம் பெருகவேண்டும் என்று மாபெரும் திட்டத்தை வாஜ்பாய் அறிவித்தபோது தனது ஆதரவை தெரிவித்ததே அவருடைய சமூக அக்கறைக்கு ஒரு உதாரணம்” என்று கூறியுள்ளார். 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, “பத்ம விபூஷண் விருது பெற்ற ரஜினிகாந்துக்கு எனது இதயப்பூர்வ வாழ்த்துகள். இந்த விருதுக்கு நீங்கள் மிகவும் தகுதியானவர் தலைவா” என்று வாழ்த்தி இருக்கிறார்.

 


Post your comment





Related News
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.!
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions