நிவாரண பணியாக மாறியது ரஜினியின் பிறந்தநாள்!

Bookmark and Share

நிவாரண பணியாக மாறியது ரஜினியின் பிறந்தநாள்!

தமிழகத்தில் மட்டுமல்லாது உலக ரசிகர்களுக்கே இன்னொரு தீபாவளியாய் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 12ம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கும், ஆரவாரத்திற்கும் பெயர் போனது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.

இந்த ஆண்டு சென்னையில் பெய்த கனமழையால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை விடுத்து சோகத்தில் இருக்கும் போது எனக்கு எதுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் என்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டு அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார் ரஜினி.

தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு யாரும் கேட்கும் முன் முதல் ஆளாக வந்து ரூ.10 லட்சம் தந்தவர் ரஜினி.  தனது பிறந்த நாள் விழாவிற்கு பெரிய பெரிய பேனர்கள் அச்சிடவேண்டாம், அதற்கு பதிலாக தனது ரசிகர்களை சென்னை மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று வேண்டுதல் விடுத்துள்ளார்.

யார், என்ன சொன்னாலும், சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான். தனது பிறந்த நாளை கொண்டாட்டத்தை ரத்து செய்தாலும் எந்திரன் -2 பட வேலைகள் துவங்கிய செய்தி மற்றும் கபாலி படத்தின் இன்னொரு கெட்டப் ரிலீசாகி ரசிகர்களுக்கான விருந்தினையும் உற்சாகத்தையும் ஊட்டியுள்ளார் ரஜினி.

ரஜினி இன்று வீட்டில் இல்லாவிட்டாலும், உலகம் முழுவதிலும் உள்ள சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இணையத்தில் நேற்று நள்ளிரவு முதலே அவருக்கு வாழ்த்து செய்திகளை அனுப்பியவாறு கொண்டாடி வருகின்றனர். 

சூப்பர் ஸ்டாரின் ராகவேந்திரா அறக்கட்டளை சார்பாக வெள்ளத்தால் பாதித்த பல மக்களுக்கு உதவி செய்யும் வேலைகளும் நடக்கிறது.

 


Post your comment





Related News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதலமைச்சரின் மனைவி திடீர் சந்திப்பு!
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
மீண்டும் விவேகம் டீசர் தேதி மாறியது- ஏன்?
படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!
அஜித்திற்கு மேலும் ஒரு வில்லனா?
பாகுபலி-2விற்கே போட்டியாக அமைந்த தல படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித்துக்கு செம டைட்டில் கொடுத்த பிரபல இயக்குனர்!
கும்பக்கோணம் தீவிபத்தின் போது அஜித் என்ன செய்தார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions