ரஜினியை இயக்குகிறாரா ரஞ்சித் ?

Bookmark and Share

ரஜினியை இயக்குகிறாரா ரஞ்சித் ?

ரஜினிகாந்த் பற்றிய பரபரப்புச் செய்தியை தற்போது யார் வேண்டுமானாலும் கிளப்பி விடும் நிலை வந்துவிட்டது. அவர் இந்தப் படத்தில் நடிக்கிறார், அந்தப் படத்தில் நடிக்கிறார், இவர் இயக்கத்தில் நடிக்கிறார், அவர் இயக்கத்தில் நடிக்கிறார் என சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் செய்திகளாகவும், தகவலாகவும் வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் நேற்று தமிழ்த் திரையுலகத்தின் மக்கள் தொடர்பாளர் ஒருவர் 'ரஜினிகாந்த் , “அட்டகத்தி, மெட்ராஸ்' படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போகிறார்.

படத்தை முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார்,” என ஒரு ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், இந்தத் தகவலை ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

ரஜினிகாந்த் அவருடைய அடுத்த படம் பற்றி பலருடன் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், இதுவரை எதுவுமே உறுதி செய்யப்படவில்லை என்று சொல்கிறார்.  ரஞ்சித், ஏற்கெனவே சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் திடீரென ரஜினிகாந்த் படத்தை இயக்குவாரா என்பதும் சந்தேகம்தான். அப்படியே இருந்தாலும், ரஜினிகாந்த் படம் பற்றிய தகவல் அவரிடமிருந்தோ அல்லது படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளரிடமிருந்தோ வந்தால் மட்டுமேதான் உறுதியாகச் சொல்ல முடியும்.

அதுவரை, இது போன்று எதையாவது, யாராவது பரப்பிக் கொண்டேதான் இருப்பார்கள் என மூத்த தயாரிப்பாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.  இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய வளரும் இயக்குனர் ஒருவருடன் ரஜினிகாந்த் இணைவாரா அல்லது ஷங்கர் போன்ற இயக்குனருடன் இணைவரா என்பது ரஜினிகாந்த் முடிவு செய்தால் மட்டுமே உண்டு.

'லிங்கா' படத்தின் தோல்விக்குப் பிறகு எந்த ஒரு சோதனை முயற்சியிலும் ரஜினி இறங்குவாரா என்பது சந்தேகம்தான் என்று ஏற்கெனவே கோலிவுட்டில் பேச்சு உள்ளது.


Post your comment





Related News
ரஜினி, ரஞ்சித்தின் அடுத்த படம் எப்போது தொடங்குகிறது?
கபாலி ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு?
மலேசிய தீவில் படமாகி வரும் ரஜினியின் கபாலி!
கபாலியில் சர்வதேச வில்லன்களுடன் மோதும் சூப்பர் ஸ்டார்!
ஏவிஎம் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்கும் கபாலி
கபாலியில் புதிய வில்லன்!
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரசியல் தாதாவாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions