ரஜினிக்கு 60 நாட்கள் ஒதுக்கிய ரஞ்சித்!

Bookmark and Share

ரஜினிக்கு 60 நாட்கள் ஒதுக்கிய ரஞ்சித்!

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கியவர் ரஞ்சித். முதல் படத்தில் தினேஷ், இரண்டாவது படத்தில் கார்த்தியை நாயகர்களாக வைத்து படம் இயக்கிய இவர் அதற்கடுத்தபடியாக சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கயிருந்தது. ஆனால், அந்த நேரத்தில் ரஜினி புதுவரவு டைரக்டர்களிடம் கதை கேட்கிறார் என்று கேள்விப்பட்டு ரஞ்சித்தும் ஒரு கதையை சொன்னார்.

ஆனால் அவர் சொன்ன அரசியல் தாதா கதை ரஜினிக்கு பிடித்து விட அந்த கதையில் நடிக்க உடனே ஓகே சொல்லி விட்டார். இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த ரஞ்சித், இந்த விசயத்தை தனது இயக்கத்தில் சூர்யா படத்தை தயாரிக்கயிருந்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் சொல்ல அவர்களும், ரஜினி படவாய்ப்பு என்றால் பெரிய விசயம்.

அதனால் அந்த படத்தை இயக்கி விட்டு எங்கள் நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்குங்கள் என்று அவருக்கு சாதகமான பதில் கூறினர். விளைவு, ரஜினிக்கான கதையை மெருகேற்ற மலேசியா சென்றார் ரஞ்சித். ஆகஸ்டு மாதம் ரஜினியின் புதிய பட வேலைகளை தொடங்கயிருப்பதாக அப்படத்தை தயாரிக்கயிருக்கும் எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர் நடிகையர் யார் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், ரஜினி நடிக்கயிருக்கும் இந்த படத்தில் அவர் மட்டுமின்றி மேலும் இரண்டு இளவட்ட ஹீரோக்களும் நடிக்கிறார்கள்.

அந்த வகையில், ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகளை 60 நாட்களும், மற்ற ஹீரோக்கள் நடிக்க வேண்டிய காட்சிகளை 60 நாட்களும் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் டைரக்டர் ரஞ்சித்.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions