நான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மானை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்பேன்: லேடி ரஜினி

Bookmark and Share

நான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மானை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்பேன்: லேடி ரஜினி

தான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மான் கானிடம் என்ன கேள்வி கேட்பேன் என்பதை நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார். 

சல்மான் கானின் தபாங் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் சோனாக்ஷி சின்ஹா. அவர் நூர் என்ற படத்தில் பத்திரிகையாளராக நடித்துள்ளார். 

சுனில் சிப்பி இயக்கியுள்ள இந்த படத்தில் நூராக வருகிறார் சோனாக்ஷி. அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

நிஜத்தில் நீங்கள் பத்திரிகையாளராக இருந்தால் உங்களின் தந்தை நடிகர் சத்ருகன் சின்ஹா மற்றும் சல்மான் கான் ஆகியோரிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று சோனாவிடம் கேட்கப்பட்டது.

என் அப்பாவிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றால் காமோஷ் என்ற பதிலை அவர் சொல்ல முடியாத கேள்வியை நிச்சயம் கேட்பேன் என சோனாக்ஷி தெரிவித்துள்ளார்.

சல்மான் கானிடம் பல ஆண்டுகளாக பலரும் மீண்டும் மீண்டும் கேட்கும் அதே கேள்வியை தான் நானும் கேட்பேன் என்கிறார் சோனாக்ஷி சின்ஹா.

சல்மான் கானிடம் உங்களுக்கு திருமணம் எப்பொழுது என்ற கேள்வியை தான் பலரும் பல காலமாக கேட்கிறார்கள். இந்நிலையில் சல்மானின் காதலியான லூலியா அவரை விரைவில் திருமணம் செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions