எந்திரன் கதை வழக்கு.. கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் தரப்பு மீண்டும் வாய்தா!

Bookmark and Share

எந்திரன் கதை வழக்கு.. கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் தரப்பு மீண்டும் வாய்தா!

ரஜினி நடித்த எந்திரன் கதை உரிமை வழக்கில் கலாநிதி மாறன் தரப்பும் ஷங்கர் தரப்பும், மீண்டும் வாய்தா கேட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 23-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

எந்திரன் படத்தின் கதை தன்னுடைய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, ரூ 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆரூர் தமிழ் நாடன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வழககறிஞர்களும் ஆஜராகி தங்கள் வாதங்களை எடுத்துவைத்தனர். வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து கலாநிதி மாறன் தரப்பும் ஷங்கர் தரப்பும், மீண்டும் வாய்தா கேட்டது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை, வரும் ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. இதனால் வழக்கு மனுதாரர் ஆரூர் தமிழ்நாடனுக்கு சாதகமாக முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
முன்னணி நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர் – புகைப்படம் உள்ளே.!
இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
முதல் முறையாக வெளியான இயக்குனர் ஷங்கரின் மகன் புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!
அப்படி செய்யாதீர்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
படு பயங்கரமான 2.O ப்ரோமோஷன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions