ரஜினிக்குக் கை கொடுப்பாரா ஷங்கர்?

Bookmark and Share

ரஜினிக்குக் கை கொடுப்பாரா ஷங்கர்?

எந்த ஒரு நடிகருக்குமே வெற்றியை மட்டுமே சுவைப்பதுதான் பிடிக்கும். ஒரு தோல்வி வந்துவிட்டால், அதை உடனடியாக வெற்றியாக மாற்றுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் ரஜினிகாந்த் இப்போது உள்ளாராம்.

'லிங்கா' படத்தின் தோல்வி அவரை நிறையவே பாதித்துவிட்டது. மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்ததன் விளைவுதான் ஷங்கரை தனக்காக ஒரு படம் இயக்கிக் கொடுக்கச் சொல்வது.

இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டதாம். 'லிங்கா' படத்திலேயே ரஜினிக்கு  அவருடைய உடல்நிலை கருதி அதிகமான ஆக்ஷன் காட்சிகளையும், நடனக் காட்சிகளையும்  வைக்கவில்லை.

அவருடைய வேகமான ஸ்டைல் நடிப்பையும் படம் முழுவதும் பார்க்க முடியவில்லை. அதுவும் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. தனக்கு அடுத்தடுத்து “சிவாஜி, எந்திரன்” ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்த ஷங்கரால் மட்டுமே இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு அதிரடியான படத்தைக் கொடுக்க முடியும் என்று ரஜினி நம்புகிறாராம்.

'ஐ' படத்திலேயே முந்தைய தன்னுடைய படங்களைப் போல் அல்லாமல் படைப்பில் கொஞ்சம் சறுக்கிய ஷங்கரால், எழுத்தாளர் சுஜாதா போன்று நல்லதொரு வலது கரம் இல்லாத்ததால் ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டாருக்கு சரியாக 'கை' கொடுக்க முடியுமா என்பதுதான் கோலிவுட் வட்டாரங்களில் தற்போதைய பேச்சாக உள்ளது.


Post your comment





Related News
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?- பிரம்மாண்ட பிளான்
இந்திய சினிமாவின் முதல் ரூ 100 கோடி படம் - மறக்க முடியுமா!
ரஜினி அப்படி நடிக்கவில்லை! விளக்கம் கூறிய ஷங்கர்
முதல் நாளே ஷங்கரை திருப்தி பண்ணிட்டீங்களே.. பெரிய ஆளுதான்” ; நடிகரை பாராட்டிய ரஜினி..!
ரஜினியின் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் ரஜினி, ஷங்கரின் ஹிட் நாயகி!
2017 தீபாவளியில் திரைக்கு வரும் 2.o?
2.o படம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions