சூப்பர் ஸ்டார் பற்றிய படமா அட்ரா மச்சான் விசிலு?

Bookmark and Share

 சூப்பர் ஸ்டார் பற்றிய படமா அட்ரா மச்சான் விசிலு?

அட்ரா மச்சான் விசிலு என்ற பெயரில் புதிய படம் உருவாகி வருகிறது. இதில் மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் பெரிய நடிகராக இருக்கிறார். இவருக்கு தீவிர ரசிகர்களாக மிர்ச்சி சிவா மற்றும் சென்ட்ராயன் அகியோர் இருக்கிறார்கள். சீனிவாசனின் படங்கள் வெளியாகும் தினத்தில் பெரிய கட் அவுட் வைக்கிறது,

பால் அபிஷேகம் செய்வது என்று இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சீனிவாசனின் மறுபக்கம் தெரிய வருகிறது. இதிலிருந்து பவர் ஸ்டார் சீனிவாசனை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். இதை திரைக்கதையாக அமைத்து படமாக்கி இருக்கிறார்கள்.

இதில் பவர் ஸ்டார் சீனிவாசனின் கதாபாத்திரம் ரஜினியை சித்தரித்து உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து படத்தின் இயக்குனர் திரைவண்ணன் கூறும்போது, ‘ரஜினியுடன் ஒப்பிடுமளவிற்கு நாங்கள் பெரிய ஆள் கிடையாது.

அவரை பற்றிய படம் இல்லை. இது தவறாக செய்தி. ரஜினி இமயமலை, நாங்கள் பரங்கிமலை. ஒரு நடிகருக்கும் ரசிகர்களுக்கும் இடையே நடப்பவையை ஒரு படமாக உருவாக்கி இருக்கிறோம்.

இதில் நகைச்சுவை, சென்டிமென்ட், காதல் ஆகியவை கலந்து கமர்ஷியல் படமாக உருவாக்கி இருக்கிறேன். இது அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். படம் விரைவில் வெளியாக இருக்கிறது’ என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions