ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை பேசி நடிக்கும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை பேசி நடிக்கும் சிவகார்த்திகேயன்!

ஸ்ரீகாந்த்- ஜனனி அய்யர் ஜோடி சேர்ந்து நடித்த படம் பாகன். அந்த படத்தில் அவருடன் சூரி, ப்ளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருந்தனர். பெரிய வெற்றி இல்லை என்றபோதும், காமெடிக்காக ஓரளவு ஓடியது.

இந்த நிலையில், தற்போது வருத்தப்படாத வாலிபர் சஙகம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தின் கதைக்களமும் கிட்டத்தட்ட பாகன் பட சாயலில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

அந்த படத்தின் சாயல் மட்டுமின்றி காமெடியை வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாணியில் மிக்ஸ் பண்ணி ஒரு கலாட்டா செய்து கொண்டிருக்கிறாராம் பொன்ராம். மேலும், இந்த படத்திலும் புரோட்டா சூரி காமெடியனாக சேர்ந்திருப்பதால், அவர்களின் கூட்டணிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், காமெடியில் கூடுதல் கவனம் செலுத்துகிறாராம்.

மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி, பட நாயகி கீர்த்தி சுரேஷின் தந்தையாக நடிக்கும் கன்னட நடிகரும் ரஜினியின் ரசிகராகத்தான் நடிக்கிறாராம். அதனால் அவர் ரஜினி நடித்த பழைய படங்களின் பெருமைகளை பேசிக்கொண்டிருக்க, சிவகார்த்திகேயனோ, ரஜினி நடித்த பாட்ஷா, படைய்பபா, முத்து, சிவாஜி என்று இந்த காலத்து படங்களின் பெருமைகளை பேசிக்கொண்டிருப்பாராம். அதோடு, ரஜினி கெட்டப், ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளையும் அவ்வப்போது எடுத்து விட்டபடி நடித்துக்கொண்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.


Post your comment





Related News
ரஜினியின் ‘மன்னன்’ ஸ்டைலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்துக்கு ரஜினி பட டைட்டிலா?
ரஜினியின் பிரம்மாண்ட இடத்தில் தற்போது சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய ரஜினி!
ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம்..!
ஒரே படத்தில் ரஜினி இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த ரஜினி
ரஜினி என்னுடைய கடவுள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions