ரஜினி அட்வைஸ் சவுந்தர்யா விலகல்

Bookmark and Share

ரஜினி அட்வைஸ் சவுந்தர்யா விலகல்

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா அஸ்வின் ‘கோச்டையான்’ படம் மூலம் இயக்குனர் ஆனார். அப்படம் முடிந்து திரைக்கு வந்த நிலையில் அடுத்த படம் பற்றி ஆலோசனையில் இருந்தார். சினிமாவில் கவனத்தை குறைத்துக் கொண்டு இல்லறத்தில் கவனம் செலுத்தும்படி ரஜினி கூறியிருந்தார்.win

இதற்கிடையில் ஈராஸ் திரைப்பட நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவின் அதிகாரியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் சவுந்தர்யா. சமீபத்தில் சவுந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

குழந்தையை உடனிருந்து கவனித்துக்கொள்ளும்படி ரஜினி கேட்டுக்கொண்டதையடுத்து ஈராஸ் நிறுவன அதிகாரி பொறுப்பிலிருந்து விலக முடிவு செய்தார். இதுபற்றி அவர் கூறும்போது,’ஈராஸ் நிறுவனத்தின் பதவி பொறுப்பிலிருந்து விலகி விட்டேன்.

இனி என் குழந்தையுடன் பொழுதை கழிப்பேன். அத்துடன் அடுத்த படத்துக்கான பணியிலும் கவனம் செலுத்த உள்ளேன்’ என இணைய தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நிறுவன பொறுப்பிலிருந்து விலகிய சவுந்தர்யா, ரஜினி நடிக்கும் புதிய படத்தில் முக்கிய பொறுப்பு ஒன்றை ஏற்று அதில் பணியாற்ற உள்ளாராம்.

 


Post your comment





Related News
ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சாதனை படைத்த அஸ்வின் தாத்தா- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு நடித்த அஸ்வின் தாத்தா கெட்டப்பின் டீசர் நாளை வெளியாகிறது
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆட்டோவை இடித்ததற்கு இதுதான் காரணமாம்
ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்
தலதளபதி குறித்த கேள்விகளுக்கு கலக்கல் பதில் கூறிய அஸ்வின்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions