ரஜினி படத்தை இயக்கும் சுந்தர்.சி?

Bookmark and Share

ரஜினி படத்தை இயக்கும் சுந்தர்.சி?

‘லிங்கா’ படத்துக்கு பின் புதுப்படங்களில் எதுவும் ஒப்பந்தமாகாமல் ரஜினி அமைதியாக இருக்கிறார். இவர் அடுத்து நடிக்கும் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். அவர் படத்தை இயக்கும் டைரக்டர் யார் என்று அறியும் ஆர்வமும் மேலோங்கி இருக்கிறது.

எந்திரன் 2–ம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிரமாக இருக்கிறார். இதற்கு இன்னும் ரஜினி தரப்பில் இருந்து ஒப்புதல் வரவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் போன்றோரில் ஒருவர் ரஜினி படத்தை இயக்கலாம் என கூறப்பட்டது. தற்போது சுந்தர்.சி. பெயர் பலமாக அடிபடுகிறது.

ஏற்கனவே ரஜினியை வைத்து அருணாசலம் படத்தை சுந்தர்.சி. இயக்கினார். 1997–ல் இப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணையப் போவதாக பேச்சு அடிபடுகிறது.

ரஜினியின் சமீபத்திய படங்கள் சீரியஸ் ஆக்ஷன் படங்களாக வந்தன. அது போன்ற கதையம்சம் உள்ள படத்தில் மீண்டும் நடிப்பதற்கு அவருக்கு விருப்பம் இல்லை. கமர்சியல் விஷயங்கள் கலந்த காமெடி படம் ஒன்றில் நடிக்க பிரியப்படுகிறார்.

அது போன்ற படங்களை எடுப்பதில் சுந்தர்.சி. திறமையானவர் என்பதால் அவருக்கே தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் கதையை தயார் செய்யும் படி கூறியுள்ளாராம். விரைவில் அறிவிப்பு வரும் என்கின்றனர். 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions