மாநகரம் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி

Bookmark and Share

மாநகரம் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி

சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ரெஜினா கஸாண்ட்ரா, ராம்தாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘மாநகரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் என்பவர் இயக்கியிருந்தார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்திவரும்  எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோரும், இன்னும் சில தயாரிப்பாளர்களும் இணைந்துள்ள பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. 

பலராலும் பாராட்டப்பட்ட இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியும் கண்டுகளித்துள்ளார். படத்தை பார்த்தபிறகு அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியுள்ளார். 

இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, " ஒரு phone call "கண்ணா ஹா ஹா" அவர்தான் அவரேதான் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மாநகரம் பார்த்துவிட்டு... இன்னிக்கு தூங்கனமாதிரிதான்..” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் ரஜினி போட்டு பேசியுள்ளார். ரஜினியின் பாராட்டால் பூரித்துப்போன எஸ்.ஆர்.பிரபு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஏற்கெனவே வெளிவந்த ‘ஜோக்கர்’ படத்தையும் ரஜினி பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions