யாருக்கும் தராத அனுமதியை லிங்குசாமிக்குத் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

Bookmark and Share

யாருக்கும் தராத அனுமதியை லிங்குசாமிக்குத் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

படத் தலைப்புகளில் தன் பெயரைப் பயன்படுத்த யாருக்கும் அனுமதி தராத ரஜினிகாந்த், இயக்குநர் லிங்குசாமி கேட்டதும் அனுமதி கொடுத்துள்ளார். இந்தத் தகவலை லிங்குசாமியே நேற்று தெரிவித்தார்.

நேற்று சோளிங்கரில் நடந்த ரஜினி ரசிகர்கள் மாநாட்டல் பேசிய இயக்குநர் லிங்குசாமி, "நான் சின்ன வயதிலிருந்து ரஜினி ரசிகன். அவரைப்போல பேசுவேன், ஆடுவேன், பாடுவேன். அப்படிப்பட்ட ஒரு வெறித்தனமான ரஜினி ரசிகன். நினைத்துப் பார்க்கிறேன்.

இப்போது கூட அவர் மனசு முழுக்க இங்குதான் இருக்கும். எல்லாரும் விழா முடிந்து பாதுகாப்பாக வீடு போய்ச் சேரவேண்டுமே என்றுஅவர் மனசு முழுக்க இங்குதான் இருக்கும். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சிலர் பேசினார்கள். இதை நாம் சொல்லக் கூடாது.

எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் விருப்பம் என்னவோ அதைச் செய்யட்டும். நான் 'முரட்டுக்காளை' படத்தை 15 முறை பார்த்தவன். நான் இயக்கும் படத்தில் எந்த கதாநாயகன் நடித்தாலும் அதில் ரஜினி சார் பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்துதான் வசனம் எழுதுவேன்.

தன் பெயரை படத் தலைப்பாகப் பயன்படுத்த யாருக்கும் அனுமதி தராதவர் ரஜினி சார். ஆனால் 'ரஜினி முருகன்' படத்துக்கு தலைப்புக்கு அனுமதி கேட்ட போது உடனே விட்டுக்கொடுத்தார். 'ரஜினி முருகன்' என்கிற பெயர் மேஜிக்கால் அது இன்று வசூலைக் குவித்து வருகிறது, " என்றார்.


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions