ரஜினி அரசியலுக்கு வருவதை நாளை அறிவிப்பார்! தமிழருவி மணியன்

Bookmark and Share

ரஜினி அரசியலுக்கு வருவதை நாளை அறிவிப்பார்! தமிழருவி மணியன்

விஜய் நடித்த புலி தயாரிப்பாளரும், விஜய்யின் பி.ஆர்.ஓ- மான பி.டி.செல்வகுமாரின் பிலிம்டூடே -2017 விருது விழா நேற்று வடபழனியில் நடைபெற்றது.

சிறந்த நடிகருக்கான விருதை விஷாலும் துப்பறிவாளன் படத்திற்காக, சிறந்த நடிகைக்கான விருதை தான்ய ரவிச்சந்திரனும் (கருப்பன்) பெற்றனர்.

சிறந்த சமூக விழிப்புணர்வாளருக்கான விருதை தமிழருவி மணியன் பெற்று கொண்டு பேசினார் .

2017-ம் ஆண்டிற்கான விருதுகளை ஆண்டின் இறுதியிலேயே பிலிம்டுடே வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. கடந்த 25 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா? என்ற விவாதம் எல்லோர் மத்தியிலும் இருக்கிறது.

அதற்கு விடை நிச்சயம் ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதை இம்மேடையில் தெரிவித்து கொள்கிரேன். கடந்த 25 ஆண்டுகளாக என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்கும் மக்களுக்கு விடை கிடைக்கும்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது ... நாட்டில் ஊழல் பெருச்சாளிகளின் அட்டூழியத்தை யாராவது ஒரு தலைவன் தட்டி கேட்க மாட்டானா என்ற ஏக்கம் எல்லா மக்களுக்கும் இருக்கிறது. ஐயா தமிழருவி மணியன் சொன்னது போல் ரஜினி அரசியல் பிரவேசம் செய்தால் நான் ஆதரிப்பேன். பி.டி.செல்வகுமார் என்னோடு 25 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறார். சிறந்த முற்போக்குவாதி, பேச்சாளர்,சமூக சிந்தனையாளர். அவரது பிலிம்டுடே விழாவில் விருது வாங்குவது மிக்க மகிழ்ச்சி.


விழாவில் விஜய்யின் ஜித்து ஜில்லாடி பாடலை தேவாவும், ஸ்ரீகாந்த் தேவாவும், பாடி நடனமாடி உற்சாகமுட்டினார்கள்.

விஷால், தான்ய, கே.வி.ஆனந்த், தன்ஷிகா,சமுத்திரக்கனி,எஸ்.ஏ.சந்திரசேகரன் , பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, ஆர்.பி.சௌத்ரி, தேவயானி, நட்டி நட்ராஜ்,ராதா ரவி, பிரசன்னா, எஸ்.வி.சேகர், நந்தன் ராம், அம்பிகா, சோனியா அகர்வால், ஆர்.கே. சுரேஷ் , விஜய் வசந்த், ராஜகுமாரன், தேவா, தம்பி ராமையா, அறம் இயக்குனர் கோபி நைனார், தீரன் அதிகாரம் ஓன்று இயக்குனர் வினோத், செல்லத்துரை, சிறந்த தயாரிப்பாளர் விருது எஸ்.ஆர்.பிரபு, இமான், அம்ரிஷ், கபிலன் வைரமுத்து, ஜெயசித்ரா, தமிழருவி மணியன், ரவிராஜா ஆகியோர் 2017 ஆண்டிற்கான விருதுகளை பெற்றனர்.

ஆண்டு தொடங்குவதற்கு முன் கொடுக்கப்பட்ட இந்த விருதால் தமிழ் திரையுலகமே உற்சாகத்தில் தத்தளித்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.டி.செல்வகுமார், A.R.பிரபு, வி.கே.வெங்கடேஷ், ரவிராஜா, பழனி குமார், சிற்பி, ஆகியோர் செய்திருந்தனர்.

 

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions