ரஜினிக்கு பாடல் இசையமைத்தவருக்கு தல-தளபதிக்கு பாடல் இசையமைக்கும் வாய்ப்பு!

Bookmark and Share

ரஜினிக்கு பாடல் இசையமைத்தவருக்கு தல-தளபதிக்கு பாடல் இசையமைக்கும் வாய்ப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளுக்காக டூபாடூ இசைத்தளத்தில் பாடல் ஒன்றை வெளியிட்டார் சேகர் சாய்பரத். இது இவரது முதல் பாடல் ஆகும். இளைஞர்கள் மத்தியில் இந்த பாடல் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த தனிப் பாடலின் வெற்றியின் மூலம் சினிமா பட வாய்ப்பை பெற்றிருக்கிறார் சேகர் சாய்பரத். 

இயக்குநர் வெற்றி மகாலிங்கம் இயக்கும் ‘விசிறி’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் சேகர் சாய்பரத். தல-தளபதி இருவரையும் ரசிகர்கள் கொண்டாடும் விதம் ஒரு பாடலை அமைத்திருக்கிறார். இதுபற்றி சாய்பரத்திடம் கேட்ட போது “ரஜினி சாரோட தீவிர விசிறி நான். அவருக்கு பண்ண பாட்டு இத்தனை பேருக்கு போய் சேர்ந்தது ரொம்ப சந்தோஷம். அத விட அந்த பாட்டு எனக்கு சினிமா சான்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கு. 

வெற்றி மகாலிங்கம் சாரோட ‘விசிறி’ படத்தில் தல-தளபதி பத்தி இப்ப ஒரு பாட்டு பண்ணிகிட்டு இருக்கேன். அது மட்டும் இல்லாம் இந்த காதலர் தினத்துக்காக ‘ஃபேஸ்புக் காதல்’ னு ஒரு பாட்டு பண்ணியிருக்கிறேன். அதுவும் டூபாடூல வெளி வருது. எனக்கு வெளிச்சம் தந்த டூபாடூவுக்கும் வெற்றிமகாலிங்கம் சாருக்கும் என்னோட தேங்க்ஸ்” என்று மகிழ்கிறார் சாய்பரத்.

 


Post your comment





Related News
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions