உதயநிதியின் மனிதனைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Bookmark and Share

உதயநிதியின் மனிதனைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மனிதன்’ இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தனது படத்தின் தலைப்போடு வெளியாகி இருக்கும் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்திருப்பதால், ‘மனிதன்’ படத்தைப் பார்க்க விரும்பினார் ரஜினி. இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரத்யேகமாக படம் திரையிடப்பட்டது.

படம் பார்த்து முடிந்தவுடன் உதயநிதிக்கு போன் பண்ணிய ரஜினி “சூப்பராக இருந்தது. படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாத்திரமும் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார்கள். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து உதயநிதி “உங்களுடைய படத்தின் தலைப்பு. நல்ல படமாக அமைந்துவிட வேண்டும் என்று கொஞ்சம் பயம் இருந்தது” என்று கூற, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

நல்ல கதை. தொடர்ச்சியாக இதே மாதிரியான படங்களில் நடியுங்கள். உங்களுக்கு கச்சிதமாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் ரஜினி. ரஜினியின் வாழ்த்தால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.

 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions