ரஜினி படத்தில் நடிக்கவே 10 கோடி கேட்ட வடிவேலு!

Bookmark and Share

ரஜினி படத்தில் நடிக்கவே 10 கோடி கேட்ட வடிவேலு!

குசேலன், சந்திரமுகி என ரஜினி படங்களில் நடிக்கத் தொடங்கிய வடிவேலு, அந்த படங்களில் தனது காமெடி மூலம் தனி முத்திரை பதித்தவர். அவரது காமெடி காட்சிகளைப்பார்த்து ரஜினியே அவரை வெகுவாக பாராட்டினார்.

குறிப்பாக, சந்திரமுகி படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்ததினால்தான் அது பெரிய அளவில் பேசப்பட்டது என்றும் அந்த சமயத்தில் அவரை புகழ்ந்தார். அதன்காரணமாக, தான் நடித்த லிங்கா படத்திலும் வடிவேலு நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம் ரஜினி.

அதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் வடிவேலுவை அழைத்து பேசியபோது, அவர் கேட்ட சம்பளம் அவரை தலைசுற்ற வைத்துவிட்டதாம். அதாவது, எத்தனை நாள் கால்சீட், எத்தனை சீன் என்பதைப் பற்றியெல்லாம் பிரச்சினை இல்லை.

ஆனால் எனக்கு 10 கோடி கொடுத்து விடுங்கள் என்று அடித்து சொல்லிவிட்டாராம். அந்த தொகையில் இருந்து அவர் இறங்கி வரும் நிலையில் இல்லையாம். இரண்டரை ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த வடிவேலு இப்படி அதிரடியாக சம்பளம் கேட்டதால்தான் அதன்பிறகு சந்தானத்தை லிங்கா படத்திற்கு புக் பண்ணினார்களாம்.

ஆனால் சந்தானமோ அப்போது ஹீரோவாகி விட்டபோதும், ரஜினி படம் என்பதால் சம்பளம் பற்றியே பேசவில்லையாம். உடனே ஓடோடிச்சென்று கமிட்டாகி விட்டாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions