வேந்தர் மூவிசுக்கு கால்ஷீட் கொடுப்பதாக ரஜினி கூறவில்லை: விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்

Bookmark and Share

வேந்தர் மூவிசுக்கு கால்ஷீட் கொடுப்பதாக ரஜினி கூறவில்லை: விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்

ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தை வாங்கி வெளியிட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டி பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து லிங்கா பட விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரூ.33.50 கோடி நஷ்டத்தில் ரூ.10 கோடி தருவதாக பேச்சுவார்த்தையில் முடிவானது. ஆனால், இதற்கு உடன்படாத பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்பிறகு ரஜினி சார்பில் திருப்பூர் சுப்பிரமணியம் இப்பிரச்சினையில் தலையிட்டு 12.50 கோடியை ரஜினி தரப்பிலிருந்து விநியோகஸ்தர்களுக்கு வாங்கிக் கொடுத்தார். ஆனால், சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு 5 கோடியே 89 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய தொகை இதுவரை கொடுக்கப்படவில்லையென்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் புகாராக தெரிவித்தனர்.

மேலும், மீதி நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி, வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் தருவதாக திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தனர்.

அப்போது திருப்பூர் சுப்பிரமணியன் கூறும்போது, லிங்கா நஷ்டத்தில் முதலில் ரூ.10 கோடி தருவதாகத்தான் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், நான்தான் ரஜினியிடம் பேசி முறையிட்டு, இந்த பிரச்சினைக்கு முழு தீர்வு கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தி மேலும் ரூ.2.50 கோடி பணத்தை விநியோகஸ்தர்களுக்கு வாங்கிக் கொடுத்தேன்.

ஆனால், அது முறையாக விநியோகஸ்தர்களை சென்றடையவில்லை என்று தற்போது விநியோகஸ்தர்கள் புகார் கூறுவது முறையற்றது. மேலும், வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுப்பேன் என்று ரஜினி யாரிடமும் கூறவில்லை.

அதை நானும், விநியோகஸ்தர்களிடம் கூறவில்லை. விநியோகஸ்தர் சிங்காரவேலன் இதுபோன்று முன்னுக்கு முரணான தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். அவர் செய்யும் தில்லுமுல்லுகள் விரைவில் அம்பலத்துக்கு வரும் என்று கூறினார்.


Post your comment





Related News
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள்
பாட்ஷா இரண்டாம் பாகத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்! - சத்யா மூவீஸ்
ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions