நட்புக்கு எடுத்துக்காட்டு ரஜினி! - வி.ஜி.பி.சந்தோசம்

Bookmark and Share

நட்புக்கு எடுத்துக்காட்டு ரஜினி! - வி.ஜி.பி.சந்தோசம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வி.ஜி.பி.சந்தோசம் நிறைய சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். சமீபகாலமாக அவரை சினிமா வட்டாரங்களில் காண முடிவதில்லை.

ஆனால் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ரு படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

அதோடு, 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எங்களது விஜிபி தங்க கடற்கரையில் நிறைய படப்பிடிப்புகள் நடக்கும்.அதனால் நாங்கள் அடிக்கடி அங்குள்ள லொகேசன்களை புதிது புதிதாக மாற்றிக்கொண்டே இருந்தோம்.

அதனால் அங்கு சினிமாக்காரர்கள் அதிகமாக வரத் தொடங்கினர். அவர்களைப்பார்க்க மக்கள் கூட்டமும் அலைமோதியது. ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களே தங்களது படங்களின் படப்பிடிப்பை தங்க கடற்கரையில் நடத்துவதில் ஆர்வம் காட்டினர்.

அப்படி படப்பிடிப்புகள் அதிகமாக அங்கு நடைபெற்றதால் விஜிபி கோல்டன் பீச் என்பது பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. அந்த சமயத்தில், ரஜினி எங்களுக்கு நெருக்கமான நண்பராக இருந்தார்.

அவர் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அவருக்கும், லதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அதனால் எங்கள் வீட்டிற்கும் புதுமண தம்பதிகளை வரவைத்து விருந்து கொடுத்து உபசரித்தோம்.

அப்படி தொடங்கிய எங்களது நட்பு இப்போது வரை தொடர்ந்து நட்புக்கு நல்ல எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் ரஜினி என்று கூறினார் வி.ஜி.பி.சந்தோசம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions