ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?

Bookmark and Share

ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?

பட்ட காலிலேயே படும் என்பதுபோல்.. உத்தமவில்லன் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் லிங்குசாமியை இன்னமும் படுத்தி எடுக்கிறது. சிவகார்த்திகேயனை வைத்து லிங்குசாமி தயாரித்த படம் ரஜினிமுருகன்.

இயக்குநர் பொன்ராம், இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரை உள்ளடக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்த ரஜினி முருகன் படம் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாய் முடிவடைந்தது.

இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. அவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு சில நாட்களே உள்ளநிலையில் ரஜினி முருகன் படத்துக்கான புரமோஷன் கூட இன்னும் துவங்கவில்லை.

என்ன காரணம் என விசாரித்தால்... புதிய தகவல் சொல்கிறார்கள்.உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களினால் ஏற்பட்ட கடன்களை அடைப்பதற்கு தேவையான பணத்தை புரட்ட வேண்டியுள்ளதால், ரஜினிமுருகன் பட புரோமோஷன் இன்னும் துவங்கப்படவில்லையாம்..இதன்காரணமாக, ரஜினிமுருகன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post your comment





Related News
மீண்டும் இணையும் ரஜினிமுருகன் கூட்டணி
அமெரிக்காவில் வசூலில் கலக்கும் ரஜினிமுருகன்!
பொங்கலில் வெளியான படங்களின் வசூல் நிலவரம்!
ரஜினிமுருகன் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
இன்னும் நான்கு நாட்களில் ரஜினிமுருகன்!
பொங்கல் முதல் ரஜினி முருகன்!
விநாயகர் சதுர்த்தியில் ரஜினிமுருகன்!
தள்ளிப் போகிறதா சிவகார்த்திகேயன் படம்?
ராஜ்கிரண் நடிப்பை பார்த்து அசந்துபோன சிவகார்த்திகேயன்
ரஜினிமுருகன் முழுமையான நகைச்சுவை படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions