பொங்கல் முதல் ரஜினி முருகன்!

Bookmark and Share

பொங்கல் முதல் ரஜினி முருகன்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு  சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படமும் அதர்வா நடித்த ஈட்டி  படமும் டிசம்பர் 4-ந்தேதி அன்று ரிலீசுக்கு தயார் ஆக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் பல்வேறு இடங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில், தற்போது மழை நின்று இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் சற்று திரும்பிய நிலையில், இன்று டிசம்பர் அதர்வாவின் ஈட்டி படம் வெளியாகி உள்ளது. 

இதைத்தொடர்ந்து ஜனவரி 14-ந்தேதி பொங்கல் அன்று  சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions