நடிப்பு பயிற்சி வகுப்பு தொடங்கினார் ராஜீவ் மேனன்

Bookmark and Share

நடிப்பு பயிற்சி வகுப்பு தொடங்கினார் ராஜீவ் மேனன்

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் கடந்த பத்து ஆண்டுகளாக மிண்ட்ஸ்கிரீன் பிலிம் இன்ஸ்ட்டியூட் என்ற பெயரில் சினிமா பயிற்சி கல்லூரி நடத்தி வருகிறார். இதில் அவர் மாணவர்களுக்கு ஒளிப்பதிவின் நுணுக்கங்களை கற்று கொடுத்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இன்ஸ்டிடியூட்டில் திரைக்கதை அமைக்க கற்றுத் தரும் ஸ்கிரீன்ப்ளே ரைட்டிங் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதுதவிர அவ்வப்போது நடிப்பு பயிற்சி பட்டறைகளும் நடத்துப்பட்டு வந்தது.

இப்போது 6 மாத நடிப்பு பயிற்சி வகுப்புகளையும் தொடங்கி இருக்கிறார். வருகிற மே மாதம் முதல் வகுப்புகள் தொடங்குகிறது.

இதுகுறித்து ராஜீவ் மேனன் கூறியதாவது:

மனித குலம் தோன்றியது முதலே மற்றவர்களை மகிழ்விக்க ஏதோ ஒரு முயற்சி செய்து வருகிறோம். அதில் ஒன்று நடிப்பு. முன்காலத்தில் தேர்ந்தெடுத்த குருவிடம் நடிப்பு கற்றார்கள். திரைப்படங்களின் வருகைக்கு பிறகு நடிப்புக்கான இலக்கணங்கள் மாறிவிட்டது.

நடிப்பதற்கு நடிப்பு பயிற்சியோடு நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படை விஷங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுத் தருகிற பள்ளியை தொடங்கி உள்ளேன். இதில் பிரதாப் போத்தன், அர்ச்சனா, தலைவாசல் விஜய், போன்றவர்கள் கற்றுத் தர இருக்கிறார்கள். என்றார்.

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions