மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்

Bookmark and Share

மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்

முதலில் கதாநாயகன், முக்கிய கதாபாத்திரம், குணச்சித்திர வேடம், வில்லன் என பல அவதாரங்கள் எடுத்த ராஜ் கிரண், தனுஷ் இயக்கிய ‘பா.பாண்டி’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார். 

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை டைரக்டு செய்தவர், ராம்பிரகாஷ் ராயப்பா. இவர், அந்த படத்தை அடுத்து, ‘போக்கிரி ராஜா’ படத்தை டைரக்டு செய்தார்.

தற்போது, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து படம் இயக்குகிறார். 

ராஜ்கிரணுடன் டி.வி. புகழ் ரக்‌ஷன் நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது, நவீன தொழில்நுட்பத்தை விரிவாக அலசும் படமாக உருவாகிறது. கல்பத்தரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.


Post your comment





Related News
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?
தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?
கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்
பவர் பாண்டியில் ராஜ்கிரணாக நடிக்கும் தனுஷ்?
தனுஷ் இயக்கும் படம் ஹாலிவுட் காப்பியா? படக்குழு விளக்கம்!
தனுஷ் பட நாயகி முடிவானார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions