ராஜ்கிரண் - மீனா நடிப்பில், என் ராசாவின் மனசிலே பார்ட்-2

Bookmark and Share

ராஜ்கிரண் - மீனா நடிப்பில், என் ராசாவின் மனசிலே பார்ட்-2

தயாரிப்பாளராக இருந்த ராஜ்கிரண், ஹீரோவாக அறிமுகமான படம் ’என் ராசாவின் மனசிலே’. கஸ்தூரி ராஜா இயக்கிய இப்படத்தில், ராஜ்கிரண் ஜோடியாக மீனா ஹீரோயினாக நடித்தார்.

முரட்டு மாயாண்டியாக ராஜ்கிரணும், அவரது மனைவியாக பயந்த சுபாவம் உடைய சோலையம்மாவாக மீனாவும் நடித்திருந்தனர். கிராமத்து பின்னணியில் உருவான இப்படம், வௌ்ளி விழா கொண்டாடியது.

மேலும் இளையராஜாவின் இசையமைப்பில் வளிவந்த பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. ராஜ்கிரண், மீனா, வடிவேலு ஆகியோருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்த படம் ’என் ராசாவின் மனசிலே’.

இப்படம் கொடுத்த வெற்றியால் அதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்தார் ராஜ்கிரண். பின்னர் ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார் ராஜ்கிரண். இந்நிலையில், 24 வருடங்களுக்கு பிறகு இப்போது என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் ராஜ்கிரண்.

இதுகுறித்து ராஜ்கிரண் கூறியுள்ளதாவது,

என் ராசாவின் மனசிலே படத்தில் மாயாண்டியும், சோலையம்மாவும் இறந்து போன மாதிரி கதையம்சம் இருந்தது. இரண்டாம் பாகத்தில் அவர்கள் இருவரும் இறக்காமல் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்பது மாதிரியான கதையில் இப்படம் உருவாக இருக்கிறது.

இதிலும் நானே நடிக்கிறேன். என்னுடன் மீனாவையும் நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். இதுதொடர்பாக விரைவில் அவரிடம் பேசவுள்ளேன். இளையாராஜா தான் இசையமைப்பார். விரைவில் இப்படம் துவங்க இருக்கிறது என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?
தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?
கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்
பவர் பாண்டியில் ராஜ்கிரணாக நடிக்கும் தனுஷ்?
தனுஷ் இயக்கும் படம் ஹாலிவுட் காப்பியா? படக்குழு விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions