'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?

Bookmark and Share

'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?

ரேவதி மேடம் ஒரு நடிப்பு ராட்சசி என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். தனுஷ் இயக்கியுள்ள ப. பாண்டி படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் ஹீரோவான ராஜ்கிரண் இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் ஜீன்ஸ் எல்லாம் போட்டு ஸ்டைலாக உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ராஜ்கிரண் கூறுகையில்,

பவர் பாண்டி ஒரு ஸ்டண்ட் மாஸ்டர். என் கதாபாத்திரத்தில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஆனால் பாண்டி கதாபாத்திரத்திற்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்றார் தனுஷ்.

நான் கூச்ச சுபாவம் உள்ளவன். அதனால் நடிகன் ஆவேன் என நினைத்துக் கூட பார்த்தது இல்லை. பவர் பாண்டி படத்தில் ஜீன்ஸ், லெதர் ஜாக்கெட் போட்டு புல்லட் ஓட்டினேன். இந்த மாதிரி என்னை தனுஷ் பார்க்க விரும்பினார்.

இயக்குனர் தனுஷ் என்னை பிரமிகக வைத்துவிட்டார். செட்டில் அவர் மிகவும் கூலாக இருப்பார். மிகவும் திறமைசாலி. அனைவரையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்.

ரேவதி மேடமுடன் சேர்ந்து நடித்தது சவாலாக இருந்தது. அவர் ஒரு நடிப்பு ராட்சசி. அவர் கவுரவத் தோற்றம் தான் என்றாலும் அவரின் நடிப்பு வேற லெவல். அவருடன் சேர்ந்து நடிக்கும்போது பதட்டமாக இருந்தது என்றார் ராஜ்கிரண்.


Post your comment





Related News
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?
கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்
பவர் பாண்டியில் ராஜ்கிரணாக நடிக்கும் தனுஷ்?
தனுஷ் இயக்கும் படம் ஹாலிவுட் காப்பியா? படக்குழு விளக்கம்!
தனுஷ் பட நாயகி முடிவானார்!
தனுஷ் இயக்குனராகும் பவர் பாண்டி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions