காமெடிக்கு மாறிய சீரியஸ் நடிகர் ராஜ்கிரண்!

Bookmark and Share

காமெடிக்கு மாறிய சீரியஸ் நடிகர் ராஜ்கிரண்!

என்னை பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே என ஆரம்பத்திலேயே சென்டிமென்ட் கலந்த காதல் கதைகளில் நடித்தவர் ராஜ்கிரண். பின்னர் நந்தா படத்திற்கு பிறகு சீரியசான வில்லனாகவும் உருவெடுத்தார். அதேசமயம், அந்த கதாபாத்திரங்களிலும் உருக்கம் கலந்திருந்தது.

அதன்காரணமாக அவரை முழு வில்லனாக ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. அதனால் அவரை இப்போது கலங்க வைக்கும் அப்பா வேடங்களில் நடிக்க வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், அப்பா, அண்ணன், மாமனார் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ராஜ்கிரண். ஆனால், தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரஜினி முருகன் படத்தில் அவரது தாத்தாவாக நடித்திருக்கிறார். குறிப்பாக, அவரது பேவரிட் சென்டிமென்ட் காட்சிகள் இருப்பினும், காமெடிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கேரக்டராம்.

அதனால் இதற்கு முன்பு பட்டும் படாமலும் காமெடி செய்து வந்த ராஜ்கிரண், இந்த படத்தில் காமெடி காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.

அதாவது, இதற்கு முன்பு சிவகார்த்திகேயனை வைத்து பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜ் நடித்தது போன்று காமெடி கலந்த தாத்தாவாக இப்படத்தில் படம்முழுக்க வளைய வந்துள்ளாராம் ராஜ்கிரண்.


Post your comment





Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?
தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?
கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்
பவர் பாண்டியில் ராஜ்கிரணாக நடிக்கும் தனுஷ்?
தனுஷ் இயக்கும் படம் ஹாலிவுட் காப்பியா? படக்குழு விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions