வழி தெரியாமல் தொலைந்து போன ராஜ்கிரண்!

Bookmark and Share

வழி தெரியாமல் தொலைந்து போன ராஜ்கிரண்!

கார்த்தியுடன் இணைந்து ராஜ்கிரண் நடித்துள்ள படம் கொம்பன். பருத்தி வீரன் படம் முழுக்க முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டது போன்று இந்த படம் ராமநாதபுரத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.

அதுவும் அங்குள்ள நகரங்களில் இல்லாமல் குக்கிராமங்கள் உள்ள பகுதிகளிலும், மலையடிவாரங்களிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அதனால், ஒவ்வொரு நாளும், தங்கியிருந்த ஹோட்டல்களில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கு காடு மலைகளை கடந்து சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகே ஸ்பாட்டை அடைந்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் செல்லும் பாதையில் சரியான சாலைகள் இல்லாததால் ஒருநாள் ராஜ்கிரண் சென்ற காரை ஓட்டிச்சென்றவர் வழி தெரியாமல் வேறு ஏரியாவுக்கு சென்று விட்டாராம்.

ஆனால், அவருக்கு முன்னால் காரில் சென்று கொண்டிருந்த கார்த்தி படப்பிடிப்பு தளத்தை அடைந்தபோதுதான், பின்னாடி வந்தவர்களை காணவில்லையே என்பது தெரியவந்திருக்கிறது.

அதையடுத்து செல்போனில் தொடர்பு கொண்டபோது டவர் கிடைக்கவில்லையாம். இதனால் நாலாபுறங்களுக்கும் யூனிட் நபர்கள் தேடிச்சென்று ஒரு காட்டுப்பகுதிக்குள் தடுமாறிக்கொண்ட நின்ற அவர்களை கண்டு பிடித்துள்ளனர்.

அதனால் அன்றைய தினம் அரைநாள் படப்பிடிப்பே நடக்கவில்லையாம். அதிலிருந்து ராஜ்கிரணை அந்த ஏரியாவை நன்கறிந்த டிரைவரின் காரில் ஏற்றி விட்டார்களாம்.


Post your comment





Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?
தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?
கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்
பவர் பாண்டியில் ராஜ்கிரணாக நடிக்கும் தனுஷ்?
தனுஷ் இயக்கும் படம் ஹாலிவுட் காப்பியா? படக்குழு விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions