தயாரிப்பாளர் தேடுகிறார் ராஜ்கிரண்

Bookmark and Share

தயாரிப்பாளர் தேடுகிறார் ராஜ்கிரண்

ராஜ்கிரண் தற்போது காஸ்ட்லியான கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வருகிறார். தாத்தா, மாமா, அப்பா கேரக்டரில் நடிக்க கணிசமாக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜ்கிரண் அறிமுகமான என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்.

24 வருடங்களுக்கு முன்பு வந்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்தக் கதையில் மீனா இறந்து விடுவார். அவர் இறக்காமல் இருந்து மீனா, ராஜ்கிரண் தம்பதிகளுக்கு ஒரு மகன் இருந்தால் எப்படி இருக்கும்.

அவனது இன்றைய காதல் எப்படி இருக்கும், ராசாவின் மனசிலே காதல் எப்படி இருந்தது என்பது மாதிரியான கதையாக இது இருக்குமாம். அதாவது இந்தக்கால காதலை விட அந்தக் கால காதலே சிறந்தது என்பதை சொல்லும் படமாக இருக்கும்.

படத்திற்கான பேப்பர் வேலைகளை முடித்து விட்டார் ராஜ்கிரண். திரைக்கதையும் முழு வடிவம் பெற்றுவிட்டது. மீனாவிடமும் பேசி ஓகே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. 5 கோடிக்குள் படத்தை எடுத்துவிட ராஜ்கிரண் முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக தயாரிப்பார் தேடிக் கொண்டிருக்கிறார். ஓருவேளை தயாரிப்பாளர் கிடைக்காவிட்டால் தானே தயாரித்து இயக்கவும் முடிவு செய்திருக்கிறார். ராஜ்கிரண், மீனா தம்பதிகள் மகனாகவும், மகனின் காதலியாகவும் புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள்.


Post your comment





Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?
தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?
கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்
பவர் பாண்டியில் ராஜ்கிரணாக நடிக்கும் தனுஷ்?
தனுஷ் இயக்கும் படம் ஹாலிவுட் காப்பியா? படக்குழு விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions