தணிக்கை குழுவில் அரசியல்வாதிகள்: ராஜ்கிரண் குற்றச்சாட்டு

Bookmark and Share

தணிக்கை குழுவில் அரசியல்வாதிகள்: ராஜ்கிரண் குற்றச்சாட்டு

நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டிருந்து ராஜ்கிரண் நடித்துள்ள சிவப்பு படம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதில் அவருடன் நவீன் சந்த்ரா, ரூபா மஞ்சரி நடித்துள்ளனர். கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ராஜ்கிரண் பேசியதாவது:நான் எத்தனையோ படங்களில் நடித்தாலும் சில படங்கள் என்னை மிகவும் பாதித்துவிடும். அப்படிபட்ட படங்களில் சிவப்பும் ஒன்று.

இலங்கையில் இருந்து வரும் அகதிகள் தமிழ்நாட்டில் படும் துன்பங்களை சொல்கிற படம். இங்கு கட்டிட வேலைகளில் அவர்கள் படும் துன்பமும், இங்கிருந்து உயிரை பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல அவர்கள் செய்யும் முயற்சிகளையும் படம் சொல்கிறது.

பொதுவாக இலங்கை தமிழர்கள் படம் என்றாலே அதற்கு பல வழிகளில் இடையூறு வருகிறது. அதற்கு காரணம் நமது மத்திய அரசின் வெளியுறவு கொள்கை. நேபாளம், பர்மா, போன்ற நாடுகளில் இருந்து வருகிற அகதிகளுக்கு வாழ எல்லாவிதமான வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசாங்கம் இலங்கை தமிழ் அகதிகளை மட்டும் குற்றவாளிகளாக பார்க்கிறது. காரணம் வெளியுறவு கொள்கை. இங்குள்ள அரசியல்வாதிகளும் அப்படித்தான் பார்க்கிறார்கள்.

விடுதலைபுலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று மத்திய அரசு கருதுவதால் இங்கு வரும் இலங்கை தமிழ் அகதிகளையும் தீவிரவாதிகளாக இருப்பார்களோ என்ற கண்ணோடத்துடன் பார்க்கிறது.

அதனால் இங்கு வரும் அகதிகள் படும் துயரம் கொடுமையானது. தணிக்கை குழுவில் அரசியல்வாதிகளே உறுப்பினர்களாக இருப்பதால் தணிக்கை குழுவின் பார்வையும் அப்படித்தான் இருக்கிறது.

இலங்கை பற்றி வந்த சில படங்கள் தணிக்கையில் எந்த தடையும் இன்றி சமீபத்தில் வெளிவந்தது. அவைகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படங்கள். ஆனால் சிவப்பு ஒரு வாழ்வியல் பதிவு.

இலங்கை பெண்ணுக்கும், தமிழ் இளைஞனுக்குமான காதல் வழியாக இலங்கை அகதிகளின் துன்பத்தை மனிதாபிமானத்தோடு சொல்கிற படம். இந்தப் படம் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் இன்னும் மனிதாபிமானம் இருக்கிறதாக பொருள். இவ்வாறு ராஜ்கிரண் பேசினார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions