படம் இயக்கும் அசத்தப்போவது யாரு ராஜ்குமார்!

Bookmark and Share

படம் இயக்கும் அசத்தப்போவது யாரு ராஜ்குமார்!

தொலைக்காட்சியில் வெளியான அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியை இயக்கியவர் ராஜ்குமார்.

வாரந்தோறும் வித்தியாசமான காமெடிகளை வழங்கிவந்த அந்த நிகழ்ச்சியில் ஸ்டேன்டப் காமெடி சொன்ன பல காமெடியன்கள் இப்போது சினிமாவில் பெரிய காமெடியன்களாகி விட்டனர். அவர்களில் மதுரை முத்து, ஈரோடு மகேஷ், ரோபோ ஷங்கர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தபோதே சினிமாவில் படம் இயக்கவும் திட்டமிட்ட இயக்குனர் ராஜ்குமார், அருள்நிதி நடிப்பில பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் வில்லனாக நடித்தார்.

அதைத் தொடர்ந்து எட்டுத்திக்கும் மதயானை உள்பட சில படங்களிலும் நடித்த அவர், இப்போது துவார் சந்திரசேகர் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

மேலும், காமெடி நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ராஜ்குமார் இந்த படத்தையும் புதுமையான காமெடி கதையிலேயே இயக்குகிறாராம்.

அதனால் சினிமாவில் உள்ள பிரபல காமெடியன்கள் மட்டுமின்றி, அவரது டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சில முக்கிய காமெடியன்களையும் இப்படத்தில் நடிக்க வைக்கிறாராம் ராஜ்குமார்.


Post your comment





Related News
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி
பிரபல நடிகரின் மனைவி பர்வதம்மா மரணம்- வருத்தத்தில் திரையுலகினர்
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?
இசைக்கலைஞர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.ராஜ்குமார் மீண்டும் தேர்வு
என் தந்தையை கடத்திய வீரப்பனை சினிமாவிலாவது கொல்ல முடிந்ததே - சிவராஜ்குமார் நெகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions