வீரப்பன் கதையில் கன்னட ராஜ்குமாருக்கு வலை

Bookmark and Share

வீரப்பன் கதையில் கன்னட ராஜ்குமாருக்கு வலை

சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு பல ஆண்டுகள் ஆனபிறகும் அவனது வாழ்க்கை சம்பவங்கள் இன்னமும் படமாகி வருகிறது. ஏற்கனவே அர்ஜுன் நடிப்பில் ‘வனயுத்தம்’ படம் வெளியானது.

இந்நிலையில் ராம் கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் புது படம் தயாரிக்கிறார். இதில் மற்ற பாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவத்தை தொடாமல் இப்படத்தை உருவாக்க முடியாது.

ஆனால் இயக்குனர் வர்மா, அந்த பகுதியை மிகவும் குறைவாகவே பயன்படுத்த எண்ணி உள்ளார். அந்த கதாபாத்திரத்துக்கு யாரை தேர்வு செய்யலாம் என்று யோசித்து வருகிறார்.

சமீபகாலமாக ராம் கோபால் வர்மா சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லியும், மம்மூட்டி உள்ளிட்டவர்களைப் பற்றி விமர்சித்திருந்ததும் திரையுலகினர் மத்தியில் ஒருவித வெறுப்பை அவர் மீது ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் பெரிய நடிகர்கள் யாரையும் அணுகி கால்ஷீட் பெற முடியாதபடி தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. இதையடுத்து ராஜ்குமார் கதாபாத்திரத்துக்கு நடிகரை தேர்வு செய்யாமல் அக்காட்சியில் முகத்தை காட்டாமல் மறைமுக காட்சிகளாக படமாக்க திட்டமிட்டிருக்கிறார். 


Post your comment





Related News
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி
பிரபல நடிகரின் மனைவி பர்வதம்மா மரணம்- வருத்தத்தில் திரையுலகினர்
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?
இசைக்கலைஞர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.ராஜ்குமார் மீண்டும் தேர்வு
என் தந்தையை கடத்திய வீரப்பனை சினிமாவிலாவது கொல்ல முடிந்ததே - சிவராஜ்குமார் நெகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions