யூனிட்டை ஆச்சர்யப்படுத்திய டி.ராஜேந்தர்!

Bookmark and Share

யூனிட்டை ஆச்சர்யப்படுத்திய டி.ராஜேந்தர்!

வல்லவன் படத்தில் நயன்தாரா- ரீமாசென்னுடன் இணைந்து அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்கு தறியாடி -என்று அதிரடி குத்தாட்டம் ஆடியிருந்தார் சிம்பு. அந்த பாடலை அவரது தந்தையான டி.ராஜேந்தரே சிம்புவுக்காக பின்னணி பாடியிருந்தார்.

அதேபோல் இப்போது விழித்திரு என்ற படத்துக்காக டி.ராஜேந்தரும் ஒரு பாடலில் இரண்டு இளவட்ட நடிகைகளுடன் இணைந்து சமீபத்தில் ஆடிய குத்தாட்டம் செம கலக்கலாக வந்துள்ளதாம். அதோடு, அந்த பாடலில் ஆடிய இளவட்ட நடிகைகளே அவ்வப்போது கால் வலிக்கிறது.

இடுப்பு வலிக்கிறது என்று ரெஸ்ட் எடுக்க ஓடி விட்டார்களாம். ஆனால், டி.ஆரோ ரெஸ்ட்டே எடுக்காமல், களத்தில் நின்றபடி அதிரடி நடனமாடினாராம். 60 வயதிலும் அசராமல் அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்த அனைவருமே அவரது உடல் உறுதியை ஆச்சர்யமாக பேசிக்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த படம் வெளியான பிறகு டி.ஆரின் நடனத்துக்கு கோலிவுட்டில் மவுசு ஏற்படும் என்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions