உதவியாளர்களை டான்ஸ் மாஸ்டராக்கும் ராஜூசுந்தரம்!

Bookmark and Share

உதவியாளர்களை டான்ஸ் மாஸ்டராக்கும் ராஜூசுந்தரம்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடன மாஸ்டராக திகழ்ந்தவர் சுந்தரம். அவரது மகன்கள்தான் ராஜூசுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத். இவர்களில் பிரபுதேவா ஆரம்பத்தில் பாடல்களில் நடனமாடி வந்தவர் பின்னர் ஹீரோவாகி இப்போது இயக்குனராகி விட்டார்.

அதேபோல், ராஜூசுந்தரமும், இதயம் படத்தில் இளையராஜா இசையில் உருவான ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான் உள்பட ஏராளமான படங்களில் நடனமாடியிருப்பதோடு, நடனமாஸ்டராகவும், தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்தி படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில், எல்லா மொழிகளிலுமே ராஜூசுந்தரத்திடம் நூற்றுக்கணக்கான டான்சர்கள் உதவியாளர்களாக பணியாற்றியிருக்கிறார்களாம்.

அவர்களில் திறமையானவர்களை கண்டறிந்து, தனக்கு தெரிந்த இயக்குனர்களின் படங்களில் டான்ஸ் மாஸ்டராக்கி விடுவாராம். அந்த வகையில், இதுவரை 50 பேரை நடன மாஸ்டர்களாக்கியிருக்கிறாராம் ராஜூசுந்தரம்.

சினிமாவில் புதிது புதிதாக நிறைய நடனமாஸ்டர்கள் வந்தால் தங்களுக்கான வாய்ப்புகள் குறைந்து விடும் என்று பலர் பயந்து வரும் நிலையில், ராஜூசுந்தரம் மட்டுமே தனது உதவியாளர்களை தைரியமாக மாஸ்டராக்கி வருகிறார் என்று அவரிடம் உதவியாளர்களாக இருந்து நடன மாஸ்டர் ஆனவர்கள், அவர் புகழ் பாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions