பிரபல நடிகைக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு

Bookmark and Share

பிரபல நடிகைக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு

நடிகைகள் சர்ச்சையாக பேசிவிட்டு பின்னர் வழக்குகளில் சிக்கித்தவிப்பதை பலமுறை பார்த்திருக்கிறோம்.  அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் நடிகை ராக்கி சாவந்த்.இவர் சில மாதங்கள் முன்பு ஒரு டிவி நிகழ்ச்சியில்  ராமாயணத்தை எழுதிய வால்மீகி பற்றி சர்ச்சையாக பேசியிருந்தார், அதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு  கிளம்பியது.

அதனால் அவர் மன்னிப்பு கோருவதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.இருப்பினும்  அவர் வால்மீகி சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்திவிட்டார் என்று கூறி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த  நரேந்தர் அதியா என்ற வக்கீல் லூதியானா ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு  விசாரணைக்கு நடிகை ராக்கி கோர்ட்டில் ஆஜராகத்தால் ஏப்ரல் மாதமே அவருக்கு பிடிவாரண்ட்  பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவரின் முகவரியில் ராக்கி சாவந்த் இல்லாததால் போலீஸ் அவரை கைது செய்ய  முடியவில்லை.

தற்போது மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி அவருக்கு ஜாமீனில்  வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் அந்த நடிகை எப்போதுவேண்டுமானாலும்  கைதாகலாம் என்று பாலிவுட்டில் பேசப்படுவதால், அவர் பீதியில் உள்ளாராம்.


Post your comment





Related News
சமுதாய உணர்வை காயப்படுத்தியதாக வழக்கு: ராக்கி சாவந்த் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு கைது வாரண்டு
பிரபல நடிகையை அடித்து துன்புறுத்திய கணவர்; தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டார்!
இணையதளத்தில் பரவும் ராக்கி சாவந்த் ஆபாச வீடியோ
மோடி உருவத்துடன் கவர்ச்சி உடை: ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு
ராக்கி சாவந்திற்கு இம்ரான் புகழாரம்
அனுஷ்கா போன்று என் உதட்டையும் வீங்க வைங்க கோஹ்லி: ராக்கி சாவந்த்
விருது விழாவில் அனைவரையும் கவர்ந்த ராக்கி சாவந்த்
முத்தத்தால் பிரிந்த ராக்கி சாவந்த்-மிகா சிங் ஜோடி செல்ஃபியால் இணைந்தது!
ஆசைக்கு இணங்க சொன்ன சினிமா இயக்குநர்… ஆடியோ ரிலீஸ் மேடையில் கன்னத்தில் அறைந்த நடிகை!!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions