கடலுக்கு அடியில் பயிற்சி பெறும் நடிகை ராகிணி திவேதி!

Bookmark and Share

கடலுக்கு அடியில் பயிற்சி பெறும் நடிகை ராகிணி திவேதி!

நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர், ராகிணி திவேதி. இப்போது கன்னட முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் ‘அறியான்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

நடிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் சாதனை செய்ய வேண்டும் என்று விரும்பும் ராகிணி, நீந்துவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் கடலுக்கு அடியில் நீந்தும் ‘ஸ்கூபா’ பயிற்சி பெற்று வருகிறார்.

இதுபற்றி கூறிய அவர்... நான் இப்போது நிறைய ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறேன். சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் ஆக்ஷன் ஹீரோயின் ஆக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. 

அதன் முதல் கட்டமாக, ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் நீந்தும் ‘ஸ்கூபா’ பயிற்சி பெற்றேன். அடுத்து மாலத்தீவிலும் தொடர்ந்து வேறுசில நாடுகளிலும் இந்த பயிற்சியை பெற இருக்கிறேன். முழுமையாக பயிற்சியை முடித்த பிறகு சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகு நான் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். இது தொடர்பான போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்பதே விருப்பம்” என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions