அரசியலா? நடிப்பா? ரக்ஷிதா தடுமாற்றம்

Bookmark and Share

அரசியலா? நடிப்பா? ரக்ஷிதா தடுமாற்றம்

தம், மதுர படங்களில் நடித்தவர் ரக்ஷிதா. இவர் கன்னட நடிகர் பிரேமை மணந்தார். அதன்பிறகு நடிப்புக்கு முழுக்குபோட்டார். பிறகு கர்நாடக அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். இதனால் விரக்தியில் இருந்தார். மீண்டும் அரசியலில் தீவிரம் காட்டுவதா? நடிக்க வருவதா என்று முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹவ் ஓல்டு ஆர் யு'  படம் கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது. இதில் நடிக்க ரக்ஷிதாவிடம் கேட்டபோது நடிக்க மறுத்துவிட்டார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரக்ஷிதாவின் தடுமாற்றம் குறித்து அவரது கணவரும், கன்னட நடிகருமான பிரேம் கூறும்போது,‘அரசியல், குடும்பம் என இரண்டிலும் அவர் சமன் செய்து பொறுப்பை கவனித்து வருகிறார். நடிப்பதற்கு அவகாசம் இல்லை. அதனால்தான் மீண்டும் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்கவில்லை.

இதற்கிடையில் கன்னட படம் மை நேம் ஈஸ் பியரே கவுடா படத்தில் அம்பரிஷுடன் இணைந்து நடனம் ஆட எண்ணி இருந்தார். அந்த பாடலும் படமாக்கப்படவில்லை' என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions