பெங்களூர் டேய்ஸ் - ஐ முடித்த ராகுல் ப்ரீத்தி சிங்

Bookmark and Share

பெங்களூர் டேய்ஸ் - ஐ முடித்த ராகுல் ப்ரீத்தி சிங்

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்தில் ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா, லட்சுமிராய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கிலும் இயக்குநர் பொம்மரிலு பாஸ்கர் இயக்கி வருகின்றார்.

தெலுங்கில் சர்வானந், நித்யா மேனன், வருண் தேஜ், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் டோலிவுட்டின் விருப்ப நாயகி ராகுல்  ப்ரீத்தி சிங்கும்  நடித்து வருகின்றார்.

மலையாளத்தில் நடிகை பார்வதி மேனன் நடித்த மாற்றுத்திறனாளி வேடத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ராகுல் ப்ரீத்தி சிங் 12 நாட்களில் தனக்கான பகுதிகளை நடித்து முடித்துக் கொடுத்துள்ளார்.

கிக் 2, பண்டகோ சேஷ்கோ போன்ற படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா போன்றவர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகின்றார். 


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions