ஜூனியர் என்டிஆரின் 25வது படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங்!

Bookmark and Share

ஜூனியர் என்டிஆரின் 25வது படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங்!

தமிழ் திரையில் பட வாய்ப்புகள் இல்லாத நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கு திரையில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து உச்ச நட்சத்திராக  வளர்ந்து வருகின்றார். ராகுல் ப்ரீத் சிங், தற்போது தெலுங்கு திரையில்  கிக் 2, பந்தாக சேஸ்கோ போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.

இது மட்டுமல்லாது பாலிவுட் திரையில் உருவாகும் சிம்லா மிர்ச்சி படத்திலும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படத்தில் நடிக்கும் ராகுல் ப்ரீத்தி சிங் குறித்து கடந்த சில தினங்களாக வதந்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

ஆனால் இவற்றை திட்டவட்டமாக மறுத்துள்ள நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  நடிகர் ஜூனியர் என்டிஆரின் 25வது படமான இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளன.  

லண்டனில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையாகும் இப்படத்தினை எஸ்.வி.சி.சி நிறுவனத்தின் சார்பில் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரிக்கின்றார்.


Post your comment





Related News
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions