பெண்கள் நலனுக்கு நிதி திரட்டும் ராகுல் பிரீத்சிங்

Bookmark and Share

பெண்கள் நலனுக்கு நிதி திரட்டும் ராகுல் பிரீத்சிங்

கதாநாயகிகள் பலர் சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். நடிகை ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த குழந்தைகளின் படிப்பு செலவுகள், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தானே ஏற்று செய்கிறார். ஆதரவற்ற முதியோருக்கு தங்கும் விடுதியும் கட்டி வருகிறார்.

நடிகை திரிஷா பிராணிகள் பாதுகாப்பில் அக்கறை செலுத்துகிறார். தெருவோர நாய்களை பிடித்து குளிப்பாட்டி மருத்துவ பரிசோதனைகள் செய்து தத்து கொடுக்கிறார். நடிகை சமந்தாவும் தொண்டு நிறுவனம் தொடங்கி ஏழைகளுக்கு உதவி வருகிறார். நடிகை நமீதா சொந்த செலவில் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டி கொடுத்து இருக்கிறார். சில நடிகைகள் கண்தானம் செய்து இருக்கிறார்கள்.

தற்போது நடிகை ராகுல் பிரீத்சிங்கும் சமூக சேவை பணிகளில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்து உள்ளார். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ நிதி திரட்டுகிறார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் பிரபலமானவர்களை வைத்து வருகிற 20-ந் தேதி உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார்.

ராகுல் பிரீத்சிங்கும் இதில் பங்கேற்று பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்து காட்டுகிறார். இவர் சமீபத்தில் சொந்தமாக உடற்பயிற்சி மையம் ஒன்றை திறந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. உடற்பயிற்சி கண்காட்சியில் வசூலாகும் தொகையை பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனுக்காக வழங்குகிறார்.

ராகுல் பிரீத்சிங்கின் இந்த நடவடிக்கைக்கு தெலுங்கு பட உலகில் உள்ள முன்னணி நடிகர்-நடிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உடற்பயிற்சிகள் செய்து காட்ட இருக்கிறார்கள். 


Post your comment





Related News
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions