என்னை தூக்கி ஏறிந்தவர்கள் இப்போ அதிஷ்டக்காரி என்கிறார்கள்- ராகுல் ப்ரீத் சிங்

Bookmark and Share

என்னை தூக்கி ஏறிந்தவர்கள் இப்போ அதிஷ்டக்காரி என்கிறார்கள்- ராகுல் ப்ரீத் சிங்

தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கில் தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், நான் சினிமாவுக்கு நடிக்க வந்தபோது ஒன்றும் அறியாத பெண்ணாக இருந்தேன். சினிமாவில் யார், எப்படி மாறுவார் என்றெல்லாம் கணிக்க முடியாது. பல ஆண்டுகள் சினிமாவில் இருக்கும் ஒருவர் நிலைமை ஒரே நாளிலேயே தலைகீழாய் மாறிவிடும்.

எனக்கு ஆரம்பத்தில் படங்கள் குறைவாகவே வந்தன. கடந்த ஆண்டு 3 படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் என்னை அதிர்ஷ்டமில்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள். நான் நடித்தால் படம் ஓடாது என்றும் முத்திரை குத்தினார்கள். என்னைப் பார்த்தாலே விலகி ஓடினார்கள்.

இதற்காக நான் துவண்டு விடவில்லை. தொடர்ந்து போராடினேன். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வெளியான படங்கள் வெற்றிகரமாக ஓடின. தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்கள் குவிகிறது. என்னை அதிர்ஷ்டமில்லாதவள் என்றவர்கள் இப்போது அதிர்ஷ்டக்கார நடிகை என்று கொண்டாடுகிறார்கள். நாளை படங்கள் ஓடாவிட்டால் மீண்டும் அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்பார்கள்.

நான் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டேன். உழைப்புதான் முக்கியம் என்று கூறினார்.


Post your comment





Related News
பாவனா கொடுமை எனக்கு நேர்ந்தால் காம வெறியர்களை கொலை செய்து இருப்பேன்: ரகுல்பிரீத் சிங்
அரவிந்த் சாமி, ரித்திகா சிங் இணையும் படம்
உன்னைத் தான் தேடிக்கிட்டிருந்தோம் ராசாத்தி: ரித்திகாவை மெச்சும் இயக்குனர்கள்
சீரியலில் இனி நடிக்கவே மாட்டேன்! நடிகை சாயாசிங் திடீர் முடிவு
ராகுல் ப்ரீத்தை அடுத்து விஷாலை கழட்டிவிட்ட அக்ஷரா ஹாஸன்
பைக்கில் இருந்தவரை கீழே இறக்கிய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்
அதிரடி ஆக்ஷன்: அடுத்த விஜயசாந்தியாக மாறும் ரித்திகா சிங்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்த இளம் நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நாளை சிங்கம் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வெளியீடு!
ஒரு படத்துக்காக 1000 முறை முத்தமிட்டுக்கொண்ட பிரபலங்கள் – வசூல் மழை கொட்டுகிறது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions