ராகுல் பிரீத் சிங்குக்கு தமிழில் குவியும் வாய்ப்புகள்

Bookmark and Share

ராகுல் பிரீத் சிங்குக்கு தமிழில் குவியும் வாய்ப்புகள்

ராகுல் பிரீத் சிங் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் ‘தடையற தாக்க’ ‘புத்தகம்’ படங்களில் நடித்தார். பெரிய வாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு பிரபல ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகை ஆனார். இதனால் தமிழ் பட உலகில் இருந்து மீண்டும் அழைப்புக்கள் வந்தன.

ஆனால் தெலுங்கில் பிசியாக இருந்ததால் தமிழ் படங்களை அவரால் ஏற்க முடியவில்லை. தற்போது தமிழ், தெலுங்கில் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திலும் ராகுல் பிரீத் சிங்கை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மேலும் வேறு சில படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழ், தெலுங்கு பட உலகின் ‘பிசி’ நடிகையாக ராகுல் பிரீத் சிங் மாறி இருக்கிறார்.


Post your comment





Related News
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions