ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!

Bookmark and Share

ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!

தற்போது டோலியுட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு நடிகையை தேர்வு செய்யும் போது கிட்டத்தட்ட  அனைவரின் ஹாட் சாய்ஸ் யார் என்றால், அது அழகு தேவதை ராகுல் ப்ரீத் சிங் தான் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.

அந்த அளவிற்கு ராகுல் ப்ரீத் சிங் தனது அழகாளும், நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்து விட்டார். அவர் முன்னணி இடத்தை பிடித்து விட்டார் என்றே கூறும் அளவிற்கு அவரது வளர்ச்சி இருக்கின்றது. 

வேங்கடதிரி படத்தின் மூலம் டோலியுட்டில் கால் பதித்தவர், தற்போது அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். அவர் தற்போது ரவி  தேஜாயுடன் கிக் 2, ராமுடன் பண்டக செசுகோ, ராம் சரணுடன் புரூஸ் லீ மற்றும் ஜூனியர் என் தி ஆர் சுகுமார் படம் என படு பிஸியாக இருக்கிறார்.

தற்போது அவர் தனது சம்பளத்தை ரூ 1 கோடியாக உயர்த்தி விட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர், ஆரம்பத்தில் ரூ 30 முதல் ரூ 50 லட்சம் வரை பெற்று கொண்டு இருந்தார். 

பின்னர் அவர் தனது மார்க்கெட் சூடு பிடித்ததால் சம்பளத்தை ரூ 75 லட்சமாக உயர்த்தினார். தற்போது அவர் முன்னணி இடத்திற்கு வருவதால் தனது சம்பளத்தை ரூ 1 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகின்றது.

இந்த செய்தி பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இதுவரையில்  திரிஷா, இலியானா, காஜல் மற்றும் சமந்தா ஆகியோர் தான் ரூ 1  கோடி சம்பளம் பெற்று வருவதாக தெரிகிறது.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions