
டோலிவுட்டில் தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருப்பவர் அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் ஆவார். அவர் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டு இருப்பதை டோலிவுட் வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
அவர் தன்னுடைய சம்பளத்தை ரூ 1 கோடியாக அதிரடியாக உயர்த்தி விட்டதாக செய்திகள் வெளிவந்தது நினைவிருக்கலாம். அவர் தற்போது ராம் சரணுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு தான் அவர் ரூ 1 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து ராகுல் ப்ரீத் சிங், இந்த தகவலில் உண்மை இல்லை. சினிமாவில் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் சம அளவில் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு முழு எதிர்பார்ப்பு உண்டு. ஹீரோ ஒரு படத்தை முடிப்பதற்குள், ஒரு ஹீரோயின் மூன்று படங்களில் நடித்து விடுவார்.
எனக்கு தற்போது கிடைக்கும் சம்பளம் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது, என்றார். பிரபல ஹீரோ ராம் சரணுடன் அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு ரூ 60 லட்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
Post your comment