நம்பர் 1 இடத்தை பிடிப்பேன்-ரகுல் ப்ரீத் நம்பிக்கை

Bookmark and Share

நம்பர் 1 இடத்தை பிடிப்பேன்-ரகுல் ப்ரீத் நம்பிக்கை

'என்னமோ ஏதோ', 'தடையற தாக்க' படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் கூறியது:தெலுங்கில் ஒரே நேரத் தில் கிக் 2, பண்டக சேஸ்கோ, சிம்லா மிர்ச்சி என 3 படங்களில் நடித்து வருகிறேன்.

3 படத்துக்கும் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஜெய்சல்மர், மும்பை, ராஜ்முந்திரியில் இதன் படப்பிடிப்பு மாறி மாறி நடப்பதால் ஒவ்வொரு இடத்துக்கும் அடுத்தடுத்து ஓடிக்கொண்டிருந்தேன். ஜெய்சல்மரில் நடந்த படப்பிடிப்பை மறக்க முடியாது. அங்கு நிலவிய உச்சகட்ட சீதோஷ்ண நிலை நடுங்க வைத்தது.

முதல் 3 நாட்கள் பனி மூடி இருந்ததால் படப்பிடிப்பை உடனே தொடங்க முடியவில்லை. மணிக்கணக்கில் காத்திருந்தே படப்பிடிப்பை தொடங்கினோம். என்னுடைய காட்சி முடிந்தவுடன் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டி இருக்கும் இடத்துக்கு ஓடிவருவேன்.

 4வது நாள் பாலைவனத்தில் படப்பிடிப்பு நடந்தது. பாலைவனத்தில் சூறாவளி சுழன்றடித்ததை கண்டு பயந்துவிட்டேன். தற்போது நடித்துவரும் ‘கிக் 2'வில் இரட்டை வேடம் ஏற்றிருக்கிறேன்.

நான் நடிக்கும் படங்களில் அதிக செலவில் உருவாகும் படம் மட்டுமல்ல இது, ஏற்கனவே வெளியாகி ஹிட்டான கிக் படத்தின் 2ம் பாகம். இப்படம் வெளியானால் நம்பர் ஒன் இடத்துக்கு செல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் கூறினார்.

இவரது இந்த பேட்டி டோலிவுட்டில் டாப் இடங்களில் இருக்கும் நடிகைகள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. 


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions