குயின் படத்தில் நடிக்க விரும்பும் ராகுல் ப்ரீத்தி சிங்

Bookmark and Share

குயின் படத்தில் நடிக்க விரும்பும் ராகுல் ப்ரீத்தி சிங்

டோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் ராகுல் ப்ரீத்தி சிங் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜாவுடன் நடித்துள்ள கிக் 2 படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. தற்போது நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் நன்னுக்கு பிரேமதோ படத்திலும் நடிகர் ராம் சரணுடன் புரூஸ் லீ படத்திலும் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் அடுத்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை பொயப்படி ஸ்ரீனு இயக்குகின்றார். 

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் ப்ரீத்தி சிங், தனது கனவு கதாபாத்திரமாக குயின் படத்தில் நாயகி கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தியில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளிவந்த குயின் படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் கங்கனாவிற்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

அப்படத்தில் பெண்ணின் உணர்வுகளை மையப்படுத்திய கங்கனாவின் கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக் கூறியுள்ள ராகுல் ப்ரீத்தி சிங் அது போன்ற வேடங்களில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார். 

ஹிந்தியில் வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் வாங்கியுள்ளார்.இப்படத்தில் நடிக்க சமந்தாவை அணுகிய போது ஹிந்தி வெற்றிப் படங்கள் தென்னிந்திய ரசிகர்களைக் கவரும் என்று உறுதியாக சொல்ல முடியாது என கூறி இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.
மசாலா இருக்கு? படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் - சூர்யா நாயகி ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions