தேசிய விருது பெற்ற இயக்குனருடன் கைகோர்க்கும் மம்முட்டி-அஞ்சலி

Bookmark and Share

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் கைகோர்க்கும் மம்முட்டி-அஞ்சலி

தேசிய விருது வென்ற இயக்குநர் ராம் தனது அடுத்த படத்திற்கு பேரன்பு என்று பெயரிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து அஞ்சலி நடிக்கிறார்.

ஜீவா நடித்த 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராம், அடுத்து இயக்கிய தங்க மீன்கள் படம் மூலம் தேசிய விருதைக் கைப்பற்றினார்.

இடையில் 2 வருடங்கள் எந்தப் படமும் இயக்காமல் இருந்த ராம் தற்போது பேரன்பு என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி மற்றும் 'தங்க மீன்கள்' புகழ் சாதனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முழுக்க, முழுக்க அன்பை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் மம்முட்டி ஒரு குழந்தையின் தந்தையாக நடிக்கிறார். அஞ்சலி இந்தப் படத்தில் நடித்தாலும் மம்முட்டிக்கு ஜோடி கிடையாதாம்.

 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions